புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு சுகாதார பரிசோதகர்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 


நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் காரணமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு கருதி கொட்டகலை சுகாதார பொது சுகாதாரபரிசோதர்களினால் தீடிர் பரிசோதனை நடவடிக்கையும் பயணிகளுக்கான விழிப்புணர்வும் 07.10.2020 புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. 

கொழும்பு கோட்டை புகையிரதத்தில் இருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் உடரட்டமெனிக்கே மற்றும் பொடிமினிக்கே ஆகிய புகையிரததங்களை கொட்டகலை புகையிரதநிலையத்தில் நிறுத்தப்பட்டு புகையிரதத்தினுள் சுகாதார பரிசோதகர்கள் உள் சென்று பயணிகளை சோதனையிட்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

இதேவேளை புகையிரதங்களில் முகக்கவசம் அணியாது அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மீறிசெயற்பட்டுபவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலுக்கு ஈடுபடுத்தப்படுவார்கள் என தெளிவூட்டப்பட்டதோடு புகையிரதத்தில் உள் நுளைவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவி முகக்கவசம் அணிந்து உட்செல்லுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.No comments: