பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களாக இவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
குறித்த அனைவரும் களனி களுபோவில ராஜகிரிய ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களுடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் முகாம்களுடன் தொடர்புடைய சகலரும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments: