நூறு அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்தி - இருவர் காயம்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


தலவாக்கலையில் இருந்து மையங்கென பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டி ஒன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஒயா டெஸ்போட் பாமஸ்டன் பகுதியில் வீதியை விட்டு விலகி நூறு அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 11.10.2020 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர. 

தலவாக்கலையில் இருந்து மையங்கென பகுதிக்கு சென்ற டிப்பர் வண்டி முன்னால் சென்று கொண்டிருந்த கார் வண்டியினை முந்தி கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் டிப்பர் வண்டியின் டயர்கள் வலுக்குண்டு வீதியின் அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கல்லில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஒயா பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த வீதியில் வழுக்கும் தன்மை காணப்படுகின்றமையால் வீதியின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: