மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு


உலக மது ஒழிப்பு  தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 56 மதுவரி திணைக்கள அலுவலகங்களின் கீழ் 900 உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: