கொட்டகலையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் பகுதியில் 
ஒருவருக்கும் கொட்டகலை வூட்டன் பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுசுகாதார
பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

நேற்று முன்தினம் கொட்டகலை பகுதியில் 15 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுசெய்யப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.
 
கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு பேரும் பேலியாகொட மீன்சந்தையில் தொழில்புரிந்து வந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதோடு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருவரும் 45, 46வயதினை கொண்டவர்கள் என தெரிவித்தனர். 

குறித்த இருண்டு பேரும் தொடர்பு கொண்டவர்களின் தகவலை அறிந்து இவர்களோடு தொடர்பு வைத்திருந்த அனைவரையும் சுயதனிமைபடுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதோடு கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டு பேரும் அவர்களின் வீடுகளில் தனிமைபடுத்தபட்டுள்ளதோடு தொற்றுக்கு உள்ளான இரண்டு தொற்றாளர்களையும் பொலனறுவைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை கொட்டகலை பகுதியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
உறுதிசெய்யபட்டதை தொடர்ந்து கொட்டகலையில் உள்ள அனைத்து வர்த்தக
நிலையங்களையும் மூடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணிபிரசாத் தெரிவித்தார்.

No comments: