புதிய பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்கள் கொண்டுவரும் செயற்பாட்டை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் - சஜித்


பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்களை உடனடியாக திருத்துதல் மற்றும் புதிய பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரும் செயற்பாட்டை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.

நாட்டுக்குள் பரவியுள்ள கொரோனா அலையைக் கட்டுப்படுத்தும் செயற்பாடு பின்னடைவை அடைந்துள்ளது. நாட்டிலுள்ள பி.சி.ஆர்.இயந்திரங்கள் பழுந்தடைந்துள்ளமையே இதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.

குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை இயந்திரங்கள் தரமானவையாக எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இவை பழுதானால், அதனைத் திருத்தும் தொழில் நுட்பமும் ஆட்களும் இலங்கையில் இல்லாமை பெரும் இழப்பாகக் காணப்படுகிறது.

இதனால், நாட்டு மக்கள் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். சுகாதார சேவையில் ஆட்பலமும் குறைந்துள்ளது.

எனவே, பி.சி.ஆர்.இயந்திரங்களைத் துரிதமாகத் திருத்துவதும், புதிய பி.சி.ஆர்.இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவருவதும் அத்தியாவசியமாகக் காணப்படுகிறது.

இதனை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு நபரையும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளாது, அரசாங்கம் இந்த பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: