கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் இருந்து இளைஞர் ஒருவர் தப்பியோட்டம்


கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: