பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடை

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்ட காணியில் தேயிலை மரங்களை பெக்கோ இயந்திரம் கொண்டு பறிக்கபட்டமையினால் பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியினை மறித்து மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கபட்டது இந்த எதிர்ப்பு நடவடிக்கை 22.10.2020.வியாழக்கிழமை முன்னெடுக்கபட்டது. 

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்பிரிவு தேயிலை மலையின் காணியில் வெளியார் ஒருவரினால் பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்த போது குறித்த தேயிலை மலையில் உள்ள தேயிலை மரங்களை பெக்கோ இயந்திரம் கொண்டு பறித்து கொண்டிருந்த வேளை, மக்கள் குறித்த விடயத்தை அறிந்து சம்பவம் இடத்திற்கு வருகை தந்து வீதியினை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

எமது தோட்டக்காணியில் பெற்றோல் நிரப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்க முடியாது நாம் ஒரு தேயிலை மரத்தினை பறித்தால் தோட்ட நிர்வாகம் எமக்கு 14 நாட்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர் என மக்கள் தெரிவித்தனர். 

இதேவேளை சம்வபவம் இடத்திற்கு பொகவந்தலாவ பொலிஸார் விஷேட அதிரடிப்படையினர் ஆகியோர் விரைந்து மக்களை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரபட்ட போதும் பொலிஸாருக்கும் மக்களுக்கும் அமைதியின்மை ஏற்பட்டதோடு குறித்த இடத்தில் இருந்து பெற்றோல் நிரப்பும் நிலையம் நடவடிக்கையினை முன்னெடுக்கும் நபர் வருகை தந்த வாகனத்தை வழிமறித்தனர்.ஒரு மணித்தியாலயத்திற்கு பிறகு குறித்த பெக்கோ இயந்திரத்தை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

இதேவேளை பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊடாக குறித்த தோட்டப்பகுதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றை அமைக்க உத்தியோக பூர்வமாக குறித்த உரிமையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments: