அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்றுறுதி


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகரான  ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தமக்கும் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் பக்கத்தில் பதிவு  செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

No comments: