பரீட்சைகள் ஒத்திவைப்பு-அரச கரும மொழிகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி


அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வாய்மொழி மூலமான மொழித் தேர்ச்சி பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அரச கரும மொழிகள் திணைக்கள ஆணையாளர் பிரின்ஸ் சேனாதீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த பரீட்சைக்கு தோற்ற பரீட்சார்த்திகள் எதிர்பார்த்துள்ளமையினால் இந்த பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: