திவுலுப்பிட்டிய ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டது தொடர்பான ஆய்வுகள்


திவுலுப்பிட்டிய ஆடைதொழிற்சாலை ஊழியர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டது என்பது குறித்து கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த 25 மற்றும் 26 திகதிகளில் நடைபெற்ற சில நிகழ்வுகளுக்கு, குறித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் கலந்துக்கொண்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமானநிலைய பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட விருந்துபசாரத்தில், குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிறைவேற்று அதிகாரிகள் 39 பேர் கலந்துக்கொண்டுள்ளனர்.

அவர்களில் 8 பேருக்கு தற்போதைய நிலையில், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த விடுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டிருந்ததாக தெரிவிக்கபடுகின்றது.

இதன் அடிப்படையில், கொரோனா தொற்று சமூக மட்டத்தில் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 26 ஆம் திகதி குறித்த ஆடைதொழிற்சாலையில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில், பிரபல்யமான இசைக்குழுவொன்று இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இசைக்குழுவின் உறுப்பினர்கள் 13 பேர் ஆடைத்தொழிற்சாலைக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதா என்ற ரீதியிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: