தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழப்பு


மூதுார்- கல்கந்த  தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுறுதியாகவில்லை என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுறுதியான பெண்ணின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் எனவும் இவருக்கு கொரோனா தொற்றுறுதியாகவிலலை எனவும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

64 வயதுடைய குறித்த பெண் யக்கல-வரபாலன பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: