இன்று முதல் புதிப்பிக்கப்பட்ட கொழும்பு வீதிகளில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள்


கொழும்பிலுள்ள வீதிகளில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகளை தானாக இயங்கச் செய்வதற்கான செயன்முறையொன்று இன்று காலை தொடங்கப்பட்டது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர், வீதி சமிக்ஞைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாணந்துறை – வில்லியம் சந்தி வரையிலான பாணந்துறை மொரட்டுவ, கட்டுபெத்த மற்றும் அங்குலான சந்தி என்பவற்றிலும் பொருப்பன சந்தி பெலெக்கடே சந்தி, மெலிபன் சந்தி, டெம்ப்லஸ் வீதி, தெஹிவளை மேம்பாலம், வில்லியம் சந்தி ஆகியவற்றில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞைகள் திருத்தப்பட்டு இயங்கவுள்ளன.

No comments: