பாரிய மரம் முறிந்து விழுந்ததில் மூன்று குடியிருப்புகளுக்கு சேதம்-காயங்களுக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 


ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பட்ல்கல தோட்டப்பகுதியில் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதோடு குடியிருப்பு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் காயங்களுக்குள்ளான 22 வயது இளைஞன் ஒருவர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 13.10.2020 செவ்வாய்கிழமை இரவு 09 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை முறிந்து விழுந்த மரத்தினை அகற்ற தோட்டபொதுமக்கள் தோட்டநிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதோடு பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த மக்கள் அயல் வீடுகளிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

No comments: