மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் மீள ஆரம்பம்


மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக சென்ற இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அடுத்த மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ள கண்காணிப்பு முகாம்களில் காணப்படும் இட வசதிகளை கருத்திற் கொண்டு, அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுமார் 45,000 பேர் நாடு திரும்புவதற்கு எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதேவேளை, வௌிநாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 68 இலங்கை பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மங்கள ரந்தெனிய மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: