புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை ஆரம்பம்


புதிய அரசியலமைப்பை தயாரிப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவிற்கு மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், அறை இலக்கம் 32, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபம், பெளத்தாலோக மாவத்தை, கொழும்பு 7 எனும் விலாசத்திற்கு மக்கள் தமது கருத்துக்களை அனுப்பி வைக்க முடியும்.

இதனைத் தவிர expertscommpublic@yahoo.com எனும் இணையத்தள முகவரிக்கும் கருத்துக்களை அனுப்ப முடியும்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

No comments: