பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்


தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பரிந்துரைகளுக்கமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு இம்முறை 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 85 ஆயிரத்து 244 தனியார் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

குறித்த பரீட்சைகள் 2 ஆயிரத்து 648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: