பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு


சந்தைகள் மற்றும் கடைகளில்  பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திவுலபிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களைக் கொள்வனவு செய்ய அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் நிலைமையை அபாயத்துக்கு உள்ளாக்கும் என்பதால் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான சூழ்நிலைகளில் நாட்டில் பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டிய முறையை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, அச்சமடையவோ, பொருட்களைக் கொள்வனவு செய்யவோ அவசரப் படவோ வேண்டாம் எனவும் தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: