தீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை


தீ விபத்தக்கள்ளான  நியூ டயமன்ட்  எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோரல் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்துள்ளார்.

அதேபோல், ஏனைய இழப்பீடுகளும் இதுவரை செலுத்தப்படாதுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்,கடல் சூழல் பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் நியூ டயமன்ட் கப்பல் செல்ல அனுமதிக்கப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபரிடம் அறிவித்துள்ளது.

No comments: