சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 902 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைது


மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 902 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

19 உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட மஞ்சளையும் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணத்திலுள்ள சுங்க திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: