தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சுமார் 80 கடைகளுக்கு சென்ற இரு கொரோனா தொற்றாளர்கள்


தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சுமார் 80 கடைகளுக்கு கொரோனா தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளதாக நேற்றைய தினம் இனங்காணப்பட்டதை அடுத்து பொருளாதார மத்திய நிலையம் கிருமி தொற்று நீக்கபட்டுள்ளது.

பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்த திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரும் அவருடைய லொறி ஓட்டுனரும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது அவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டிருந்தது.

குறித்த இருவரும் பழகிய தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை சேர்ந்த 100 இற்கும் அதிகமானவர்களின் பி.சி.ஆர் பரிசோதனைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: