60 அடி பள்ளத்தில் வீழ்ந்த வாகன விபத்தில் இருவருக்கு காயம்


ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா , பட்டல்கல பகுதியில் வேன் ஒன்று  60 அடிபள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனிலிருந்து புளியாவத்தை பகுதிக்கு சென்ற வேன் 22/10 இரவு 07.30 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 60 அடி பள்ளத்தில் காசல்ரி நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் வேனின் சாரதி மற்றும் பயணித்த ஒருவருமாக இருவர் காயமடைந்த நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





No comments: