நாட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவுலபிட்டியவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஊழியர்கள் 48 பேருக்கும், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 12 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், திவுலபிட்டியவுடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1307 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: