மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட ஐவரும் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி குறித்த ஆடைத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

No comments: