மேல் மாகாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்


காவற்துறை ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற 5 பேர் ஹட்டன் - டிக்கோயா பொது சுகாதார பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் சேவையாற்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி சென்றவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: