ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பம்


கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானம் இழந்தோருக்கு தலா 5000 ரூபா வீதம் வழங்கும் செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக இன்று முதல் மினுவாங்கொடை-திவுலுபிட்டி,அத்தனகல்ல மற்றும் மீரிகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 72345 பேருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் வருமானத்தை இழந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: