ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு


கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வருமானத்தை இழந்தவர்களுக்காக 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்காக அரசாங்கம் பணம் ஒதுக்கியுள்ளது.

அதன்படி, சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்காக 400 மில்லியன் ரூபாய் பணம் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் இந்த தொகை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: