மட்டக்களப்பில் ஆயிரத்து 500 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி பிரதேசத்தில் ஆயிரம்து 500 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் இருவரை நேற்று புதன்கிழமை (07) இருவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான நேற்று இரவு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்பெக்டர் எம்.ஜீ.எம். முகமட், பொலிஸ் சாஜன் ரி.கிருபாகரன் தலைமையிலான பொலிசார் நாவற்கேணி 4 குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றினை முதலில் சோதனையிட்டபோது அங்கு இருந்து ஆயிரம் மில்லிக்கிராம் கஞ்சாவை மீட்டதுடன் ஒருவரை கைது செய்தனர்
இதனையடுத்து அதே பகுதியிலுள்ள வீடு ஒன்றை சோதனையிட்டபோது அங்கு 500 மில்லிக்கிராம் கஞ்சாவை மீட்டதுடன் ஒருவர் உட்பட இருவரை செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் பல்வேறு குற்றச் செயலுடன் தொடர்பு பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
No comments: