மேலும் 47 பேருக்கு கொரோனா


மினுவாங்கொட கொத்தணியில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்த 4 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 43 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய மினுவாங்கொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2122 ஆக அதிகரித்துள்ளது.

No comments: