இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்


நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் 41500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தை விட இம்முறை 10000 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், மருத்துவ பீடத்திற்கு 371 பேரும் பொறியியல் பீடத்திற்கு 405 பேரும் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா விக்ரமாராச்சி மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

1978, 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்திற்கமைய கல்வி அமைச்சர் G.L.பீரிஸினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

No comments: