ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 40 பேர் கைது


ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டின் 68 பொலிஸ் பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த  24 மணிநேர காலப்பகுதியிலேயே, இந்த கைது  நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் 11  வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 04 ஆம்  திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை  மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்  1162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 174 வாகங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: