கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புடைய சுமார் 400 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


கம்பஹா, திவுலபிடிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளியாக இனம் காணப்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய சுமார் 400 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 400 பேருக்கும் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: