சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பம்பலபிட்டி காவல் நிலைய அதிகாரிகள்


பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்ற பம்பலபிட்டி காவல் நிலைய அதிகாரிகள் 4 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் பேலியகொடை மீன் சந்தையை அண்மித்த பகுதிகளில் நேற்றைய தினம் 1186 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,குறித்த பகுதிகளைச் சேர்ந்த 500 பேர் வரை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேபோல் பேலியகொடை மொத்த விற்பனை மீன் சந்தைக்கு மீன் வாங்கச் சென்றவர்களை தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

No comments: