தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 39 பேர் கைது


மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்  ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்கு,கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் பாணந்துரை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கைளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட நபர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.No comments: