கடந்த 24 மணிநேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 86 பேர் கைது


கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அவர்கள் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 388 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: