ஊரடங்கு சட்டத்தை மீறிய 265 பேர் கைது


கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அவர்கள் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சீதுவ, கம்பஹா மற்றும் தொம்பே ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே, பெரும்பாலான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 265 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 8 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன், புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: