கடந்த 24 மணித்தியாலங்களில் 98 பேர் கைது


கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் காவற்துறையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேலியாகொடை காவற்துறை பிரிவில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஜீப் ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படட்டதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: