24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 83 பேர் கைது


பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 76 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: