ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73 பேர் கைது


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த காலப்பகுதியில் 03 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதி முறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 1235 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இதுவரை 177 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மெலும் தெரிவித்துள்ளார்.

No comments: