மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 219 பேர் கைது


மேல்மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 98 பேர் ஹெரோயின் போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44 சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாகவும்,ஐஸ் ரக போதைப் பொருள் தம்வசம் வைத்திருந்த 19 பேரும் இதன் போது கைது செய்யப்பட்டதாகவும் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments: