இன்று முதல் ஆரம்பம் - 20வது திருத்தத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை


20வது அரசியலமைப்பு  திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.

இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இன்றைய தினம் நாடு முழுவதும் கையேடுகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அதன் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப்போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை ஆதரவு வெளியிட்டுள்ளன.

பொதுமக்களும் கறுப்புக்கொடிகளை கட்டி 20வது திருத்திற்கான எதிர்ப்புக்களை வெளிப்படுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்ப்பில் ஈடுபட்ட ஏனைய அரசியல் கட்சிகளும் முன்னெடுக்கவுள்ளன.

No comments: