20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவலை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, இந்த திருத்தத்திற்கு ஆதரவு வழங்க எதிரணியின் சிறுபான்மை கட்சிகளின் பல உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலின் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 இடங்களை வென்றுள்ளது, அவர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்போது, ​​அரசாங்கத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 150 ஆகும்.

இருப்பினும், சபாநாயகர் மஹிந்தா யபா அபேவர்தன  சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக் கை 149 ஆகவுள்ளது.

அதன் படி குறித்த திருத்தத்தை நிறைவேற்ற மேலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: