பொகவந்தலாவ பகுதியில் 20 குடும்பங்களை சேர்ந்த நூறு பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பொகவந்தலாவ நகரில் உள்ள சிறீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கடந்த 20ம் திகதி இரவு இடம் பெற்ற பூஜையில் கலந்து கொண்ட 20 குடும்பங்களை சேர்ந்த நூறு பேர் நேற்றைய தினம் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

28.10.2020.புதன் பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, குறித்த தொற்றுக்குள்ளான பெண் பொகவந்தலாவ சிறீதண்டாயுதபாணி ஆலயத்தில் இடம் பெற்ற இரவு பூஜையில் கலந்து கொண்டதனால் ஆலயத்திற்கு சென்றிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த நூறு பேர் தமது வீடுகளில் 14 நாட்களுக்கு சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை பொகவந்தலாவ பொதுசுகாதார பகுதிக்குட்பட்ட பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 50 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது 


No comments: