பால் ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


நோர்வூட்டிலிருந்து மஸ்கெலியா நோக்கி பால் ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்,

காட்மோர் பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கி வந்த அரச பஸ்ஸிற்கு இடம் கொடுக்க முற்பட்ட போதே புரன்ஸ்வீக் பகுதியில் 19/10/ காலை 07.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது,

விபத்தினால் யாருக்கும் காயங்கள் இல்லை என தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார் விபத்து தொடர்பில்  மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments: