மூன்றாவது நாளாகவும் இடம்பெறவுள்ள 20வது திருத்த மனுக்கள் மீதான பரிசீலனை


அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று 3 வது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

20வது திருத்தத்திற்கு எதிராக  முன்வைக்கப்பட்ட 39 மனுக்களில்  32 மனுக்கள் சார்பில் சட்டத்தரணிகள் தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.ஏனைய மனுக்கள் மீதான பரிசீலனை இன்று இடம்பெறவுள்ளன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற பரிசீலனைகளின் போது,இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா,20 திருத்த சட்டமூலத்தின் சில உள்ளடக்கங்களில், நீதித்துறை சுயாதீனம்,அடிப்படை உரிமை என்பன தொடர்பில் தாக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சரத்துக்களை  நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் அபிப்பிராயத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: