20வது திருத்தம் குறித்து நீதி அமைச்சு தெரிவித்துள்ள விடயம்


20வது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்போது, சர்வஜன வாக்கெடுப்பைக் கோரும் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது என நீதி அமைச்சு கூறியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 21ம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சு கூறியுள்ளது.

மேலும், 20வது திருத்த சட்ட மூலம் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த திருத்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதானால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த திருத்தங்கள், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் எனவும் நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: