20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை


அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், நாளைய தினம்  இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20வது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து, இதன்போது தீர்க்கமாகக் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம், இம்மாதம் 20ம் திகதி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், ஏற்கெனவே சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பும், அன்றைய தினமே சபாநாயகரால் விடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: