20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனையின் தீர்ப்பு இன்று


20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த தீர்ப்பினை உயர்நீதிமன்றம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு இன்று அறிவிக்கவுள்ளது.

மேலும் இதை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

20வது அரசியலமைப்பு திருத்த வரைபு எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22ம் திகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குறித்த மனுக்கள் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், கடந்த வாரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: