20வது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்னும் சில தினங்களில்


அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்னும் சில தினங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ கண்டியில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தசட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்டசியின் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் தினங்களில் 20ம் திருத்தம் தொடர்பான அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளதாக  பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.


No comments: