2019ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு


2019ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இம்முறை 41,500 ரே் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவபீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட சில துறைகளுக்கு இம்முறை அதிக மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு உயர்தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய நடத்தப்பட்டது.

 

No comments: